Reading Time: < 1 minute

வன்கூவர் தீவின் மேற்கு கடற்கரையில் விபத்துக்குள்ளான செஸ்னா 172 விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Tamil Business Directory

நேற்று முன் தினம் (சனிக்கிழமை) டோஃபினோ, பி.சி.க்கு புறப்பட்ட விமானம் அதன் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் விமானம் விபத்துக்குள்ளானதாக கண்டறியப்பட்டது. இதனைதொடர்ந்து விமானத்தை கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இந்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விமானத்தின் கலங்கரை விளக்கம் வழியாக விமானத்தின் பாகங்களை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்தனர். இதனை கூட்டு மீட்பு ஒருங்கிணைப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வன்கூவர் தீவின் மேற்கு கடற்கரையில் ஸ்டீவர்டன் இன்லெட் அருகே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்விபத்து குறித்த தகவல் எதனையும் வெளியிடாத அதிகாரிகள், இதுகுறித்து மேலதிக தகவல்களை திரட்டிவருகின்றனர்.