Reading Time: < 1 minute

மத்திய ஓஷாவாவில் (Oshawa) வெள்ளிக்கிழமை அதிகாலை சைக்கிளை ஓட்டிச் சென்ற பெண் வாகனம் ஒன்றில் மோதி இறந்து விட்டார்.

Tamil Business Directory

30 வயதுடைய அந்த பெண் பலத்த காயங்களுடன் இருந்ததாகவும் அருகில் உள்ள மருத்துவனைக்கு எடுத்துச் செல்கையில் இறந்து விட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரும் வரை பொதுமக்கள் விபத்து நடந்த பகுதியில் போக்குவரத்துப் பாதையை தடுத்தனர். விபத்தினை ஏற்படுத்திய டிரைவர் நெடுஞ்சாலை 401ல் தப்பி ஓடிவிட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். அந்த டிரைவர் பற்றிய சில ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.