Reading Time: < 1 minute

உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் 54.2 புள்ளிகளுடன் கனடா 75வது இடத்தை பிடித்துள்ளது.

Tamil Business Directory

குற்ற விகிதம், பொது பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அடிப்படையாக கொண்டு நம்பியோ தரவுத் தளம் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் பாதுகாப்பான நாடுகள் பட்டியலை வெளியிடுகிறது.

நம்பியோ பாதுகாப்பு குறியீடு
அந்த வகையில் இந்த ஆண்டு நம்பியோ பாதுகாப்பு குறியீட்டின்படி (Numbeo Safety Index) 2025-ம் ஆண்டில் உலகின் பாதுகாப்பான நாடாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இடையில் அமைந்துள்ள ஒரு சிறிய ஐரோப்பிய நாடான அன்டோரா உள்ளது. 2வது இடத்தில் ஐக்கிய அரபு அமீரகமும், 3வது இடத்தில் கத்தார் நாடுகளும் உள்ளன.

147 நாடுகளில், கனடா 54.2 புள்ளிகளுடன் 66-வது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியா 55.7 புள்ளிகளுடன் 66-வது இடத்தை பிடித்துள்ளதுடன் அமெரிக்கா 50.8 புள்ளிகளுடன் 89-வது இடமும், இலங்கை 59-வது இடத்தையும் பிடித்துள்ளன.

இந்த தரவரிசையில் 19.3 புள்ளிகளுடன் கடைசி இடத்தில், அதாவது மோசமான பாதுகாப்பு கொண்ட நாடாக வெனிசுலா உள்ளது.