Reading Time: < 1 minute

இந்த வாரம் திரைக்கு வந்த இரண்டு படங்களான நடிகர் விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ மற்றும் விஷாலின் ‘ஆக்‌ஷன்’ ஆகிய இரண்டு திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பினைப் பெறவில்லை.

Tamil Business Directory

2019ஆண்டு தொடங்கி இன்றுவரை தொடர்ந்து ஹிட் படங்கள் தமிழ்ச் சினிமாவில் வந்துக்கொண்டே இருந்தன.

இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று வெளியான இரு ஹீரோக்களின் படமும் அவ்வளவு சிறப்பாக பாக்ஸ் ஆப்பிஸில் போகவில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது.

இதனிடையே, விஜய் சேதுபதியின் ‘ சங்கத்தமிழன்’ படம் வார இறுதி நாட்களில் நன்றாக போனது. ஆனால், சுந்தர் சி இயக்கத்தில் விஷாலின் நடிப்பில் வெளியான ‘ஆக்‌ஷன் திரைப்படம் சுத்தமாக போகவில்லை என்றே தெரியவந்துள்ளது.

இதனால் பணம் போட்ட விநியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.