Reading Time: < 1 minute

கனடாவின் லாப்ரடோர் கடற்கரை பகுதியில் கருப்பு நிறத்தில் பனிப்பாறை ஒன்று தென்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Business Directory

மிகவும் அரிதாக பார்க்கப்படும் இந்த பனிப்பாறை, வெளியில் வருவது உலக அழிவுக்கான எச்சரிக்கையாக கூட இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர்.

ஆய்வாளர்களின் கருத்து
ஹல்லூர் அன்டோனியூசென் எனும் மீனவர், தனது படகிலிருந்து மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அவர் இந்த பனிப்பாறையை பார்த்திருக்கிறார். பார்ப்பதற்கு வித்தியாசமாகவும், விநோதமாகவும் இருக்கவே உடனே தனது செல்போனில் அதை படம்பிடித்துள்ளார்.

இந்த பாறை சுமார் மூன்று மாடி கட்டிடத்தின் சைஸில் இருந்ததாக கூறும் அவர், கருப்பு நிறத்தில் பனிப்பாறையை தன் வாழ்நாளில் இதற்கு முன்னர் பார்த்ததே இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார். அவர் சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்த புகைப்படம் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

சில ஆய்வாளர்கள் வித்தியாசமான விளக்கத்தை கொடுத்திருக்கின்றனர். கருப்பான பொருள் வண்டல் மண்ணாக இருக்கலாம். இந்த மண் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பனிப்பாறைக்குள் சரிந்து விழுந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

இப்போது மீனவர் பார்த்த கருப்பு பனிப்பாறை, அதன் மொத்த சைஸில் வெறும் 5% தான். இந்த பாறையை மூடியிருந்த பனி முழுவதுமாக கரைந்துள்ளது என்று கூறியுள்ளனர்.

ஆனால், வண்டல் மண் எப்படி கடலில் மிதக்கும்? இந்த கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. வேறு சிலரோ, உலகம் முழுவதும் நடக்கும் மாற்றங்களை குறிப்பிட்டு, இந்த கருப்பு பனிப்பாறை அழிவின் அறிகுறி என்று கூறுகின்றனர்.

அதாவது இஸ்ரேல்-ஈரான் போர் அணு ஆயுத மோதலை தொடங்கும் என்றும், இந்த மோதல் உலகம் முழுவதும் அணு ஆயுத பயன்பாட்டை ஏற்படுத்தும் என்றும், அது உலகத்தை அழிக்கும் என்றும் கூறுகின்றனர். இதனை முன்கூட்டியே தெரியப்படுத்ததான் கருப்பு பனிப்பாறை தோன்றியிருப்பதாகவும் கூறியுள்ளனர்.