Reading Time: < 1 minute

கடனாவில் மகனை கடத்திய தந்தை ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

இந்தியாவில் தனது மூன்று வயது மகனை நீதிமன்ற உத்தரவை மீறி வைத்திருந்த டர்ஹாம் பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஒருவர், கனடா திரும்பியவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அஷ்பெர்ன் பகுதியைச் சேர்ந்த கபில் சுனக் என்ற சந்தேகநபர், 2024 ஜூலை மாதம் தனது மகன் வலென்டினோவை அழைத்து டெல்லிக்கு பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

மகனை கடத்திய தந்தை கைது
ஆனால், நீதிமன்றம் வழங்கிய ஆகஸ்ட் 8 ஆம் திகதிக்குள் அவரை மீண்டும் கனடாவுக்கு அழைத்து வரத் தவறியுள்ளார்.

இந்த நிலையில், கபில் சுனக்குக்கு எதிராக பெற்றோர் கடத்தல் குற்றச்சாட்டு அடிப்படையில் பிடி விராந்து உத்தரவு இதற்கு முன்னரே பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த வாரம், பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் கனடா எல்லை பாதுகாப்பு முகமை (CBSA) அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.

அவரை கைது செய்யும் வகையில் முன்பே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுனக்கிற்கு 14 வயதிற்குட்பட்ட குழந்தையை நீதிமன்ற உத்தரவை மீறி கடத்திய குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜூன் 11ஆம் திகதி நீதிமன்றத்தில் அவர் ஆஜராகியிருந்தார்.