Reading Time: < 1 minute

கனடாவின் பிக்ரிங் பகுதியில் இடம்பெற்ற ஈ ஸ்கூட்டர் விபத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

தனது இ-ஸ்கூட்டரில் பயணம் செய்தபோது, வாகனமொன்றில் மோதியதில், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஐந்து நாட்கள் கழித்து உயிரிழந்தார் என ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து, கடந்த 4ம் திகதி பிக்ரிங் பகுதியில் உள்ள லிவர்பூல் சாலை (Liverpool Road) ஓன்ராம்பில் இடம்பெற்றுள்ளது.

அப்போது, இளைஞர் தனது இ-ஸ்கூட்டரில் ஓன்ராம்பைக் கடக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக ஒரு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.

தீவிர காயமடைந்த இளைஞர், உடனடியாக டொரொன்டோ பகுதியிலுள்ள சிகிச்சை மையத்துக்கு மாற்றப்பட்டார்.

ஆனால், ஜூன் 8ம் திகதி, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விபத்தினை மேற்கொண்ட வாகன ஓட்டுநர், விபத்திற்குப் பிறகும் சம்பவ இடத்திலேயே இந்து விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரகணகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.