Reading Time: < 1 minute

கடனாவில் நூதனமான முறையில் கடத்தப்பட்ட பெருந்தொகை போதைப் பொருட்களை ஒன்றாரியோ மாகாண காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

Tamil Business Directory

டார்க் வெப் மற்றும் கனடா போஸ்ட் மூலம் நாடு முழுவதும் போதைப்பொருட்களை அனுப்பி வைத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

2024 நவம்பரில் தொடங்கிய Project Bionic எனப்படும் இந்த விசாரணையில், பொலிஸார் 2025 மார்ச் 10ஆம் திகதி ஒட்டாவாவில் உள்ள கனடா போஸ்ட் மையத்தில் இருவரை கைது செய்தனர்.

அப்போது, நாடு முழுவதும் அனுப்பப்படவிருந்த 86 பார்சல்களில் பல்வேறு வகை போதைப்பொருட்கள் இருந்ததாக தெரிவித்தனர்.

27 கிலோகிராம் போதைப்பொருட்கள், 64,000 மாத்திரைகள் (மொத்தம் 37 விதமான சட்டவிரோத மருந்துகள்), திருடப்பட்ட 11 வாகனங்கள், ஒரு துப்பாக்கி மற்றும் 95,000 டொலர் பெறுமதியான பணம் என்பன களவாடப்பட்டுள்ளன.

பிரிடிஷ் கொலம்பியா, நுனாவுட், அல்பெர்டா, மானிடோபா, ஒன்டாரியோ, கியூபெக், நோவா ஸ்கோஷியா, நியூ பிரன்ஸ்விக் மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவு போன்ற பகுதிகளுக்கு போதைப் பொருள் விநியோகம் செய்யப்படவிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

டார்க் வெப் என்பது சாதாரண இணைய தேடுபொறிகளில் காண முடியாத, சிறப்பு மென்பொருள்கள் வாயிலாக மட்டுமே அணுகக்கூடிய இடமென்றும், இங்கே பெரும்பாலும் சட்டவிரோத வியாபாரங்கள் நடத்தப்படுகின்றன எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.