Reading Time: < 1 minute

ஒன்டாரியோ மாகாணத்தில் தட்டம்மை நோய் பரவலுக்கான முக்கியக் காரணம், சில சமூகங்கள் மத காரணங்களுக்காக குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மறுப்பது தான் என முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.

Tamil Business Directory

நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவில்லை என்றால், இந்த வைரஸ் விரைவாக பரவத் தொடங்கும். எனவே அனைவரும், எல்லோரும் தடுப்பூசி போட வேண்டும்,” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒன்டாரியோ மாகாணத்தில் தட்டம்மை வைரஸ் பரவல் திடீரென அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, தமது அரசு முழுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முழு வீச்சில் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

1.5 லட்சம் தடுப்பூசிகள் பொதுச் சுகாதார நிறுவனங்கள் வழியாக வழங்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் தடுப்பூசி போட ஊக்கப்படுத்த 20 லட்சம் டாலர்கள் விளம்பரத்திற்காக செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் வலியுறுத்துகையில், தடுப்பூசி செலுத்துவது எளிமையான, ஆனால் அவசியமான முடிவாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.