Reading Time: < 1 minute

கனடாவின் ரொறன்ரோவில் இருந்து இலங்கைக்கு விமானச் சேவையில் ஈடுபடுவதற்காக இலங்கை விமானச் சேவை மற்றும் இந்தியன் ஏர் லைன்ஸ் ஆகிவற்றிற்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

Tamil Business Directory

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைத்தில் இருந்து இந்தியாவின் டெல்லியிலுள்ள இந்திரா விமான நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து கனடாவின் ரொறன்ரோவில் உள்ள லெஸ்டர் பி. பியர்சன் சர்வதேச விமான நிலையத்தை சென்றடையும்.

வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் இந்த விமானச் சேவை நடைமுறையில் இருக்கும்.

இந்நிலையில் மீண்டும் கனடா- ரொறன்ரோவில் இருந்து இந்தியாவிற்கு சென்று பின்னர் இலங்கையை வந்தடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விமானச்சேவை பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.