Reading Time: < 1 minute

நேற்று இரவு ஸ்காபரோவில் கத்திக் குத்துக்கு இலக்கான பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

Kingston வீதி மற்றும் Galloway வீதிப் பகுதியில் நேற்றிரவு 9:30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதனை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் ரொரன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் காவல்துறையினர், கத்திக் குத்துக்கு இலக்கான பெண்ணும் கத்தியால் குத்திய நபரும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் என்று தெரிவித்துள்ள போதிலும், சந்தேக நபர் குறித்த விபரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை.