Reading Time: < 1 minute

நேற்று இரவு பிரம்டனில் இடம்பெற்ற வீதி விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான உந்துருளி ஓட்டுனர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

இரண்டு வாகனங்கள் தொடர்புபட்ட இந்த விபத்து, Bovaird Drive Westற்கு வடக்கே, Worthington Avenue மற்றும் Clayborne Avenue பகுதியில் நேற்று இரவு 10:15 அளவில் இடம்பெற்றுள்ளது.

உந்துருளி ஒன்றும் கார் ஒன்றும் மோதுண்டதாக கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும், அங்கே பலத்த காயங்களுடன் காணப்பட்ட உந்துருளி ஓட்டுனர் உயிராபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பீல் பிராந்திய அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

விபத்துடன் சம்பந்தப்பட்ட காரின் சாரதி சம்பவ இடத்திலேயே தரித்திருந்ததாகவும், விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் தொடர்வதாகவும் காவல்துறயைினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.