Reading Time: < 1 minute

கனடாவில் மகன், தனது தாயை படுகொலை செய்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

Tamil Business Directory

ரிச்மன்ட்ஹில் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நோர்த் யோர்க் பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 60 வயதான ஸியோமி வெங் என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

ஸியோமியின் மகனான 23 வயதான ஹென்றி ஹேய் என்பவர் இந்த படுகொலையை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த படுகொலைச் சம்பவத்தினால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.