Reading Time: < 1 minute

கனடாவின் டொரன்டோவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெக்ஸி ஒன்றை பெண் ஒருவர் களவாடிச் சென்றுள்ளார்.

Tamil Business Directory

டாக்ஸியின் சாரதி வாகனத்தை நிறுத்திவிட்டு அதன் சாவியும் வைத்து டாக்ஸிலேயே வைத்து விட்டு குப்பைகளை வீசுவதற்காக வெளியே சென்ற போது வாகனத்திற்குள் புகுந்த பெண் அதனை களவாடிச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தமது வாகனம் தென்பகுதியை நோக்கி பயணிப்பதை கண்ட குறித்த சாரதி உடனடியாக பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.

குறித்த வாகனத்தை பெண் ஒருவர் செலுத்தி செல்லும் காணொளி ஒன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இந்த பெண் தொடர்பில் மேலதிக விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

வாகனத்தை களவாடிய பெண் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.