Reading Time: < 1 minute

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஜமைக்காவைச் சேர்ந்த பிரபல நடிகரும், இசைக்கலைஞருமான லூயீ ரன்கின் (Louie Rankin) உயிரிழந்தார்.

Tamil Business Directory

நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) காலை தனது காரில் பயணித்துக் கொண்டிருந்த போது எதிரில் வந்த பாரவூர்தியொன்றுடன் மோதியே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோர விபத்தில் லூயீயின் கார் முற்றாக சேதமடைந்துள்ளது. அவரின் மறைவுக்கு துறை சார்ந்த நண்பர்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

66 வயதான லூயீ ரன்கின் கடந்த சில காலங்களாக ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தார்.

1998 ஆம் ஆண்டு வௌியான பெல்லி என்ற திரைப்படத்தில் நடித்ததன் ஊடாக அவர் ரசிகர்களின் மிக விருப்பத்துக்குரிய கதாபாத்திரமாக மாறினார்.

1953 ஆம் ஆண்டு ஜமைக்காவில் பிறந்த லூயீ பிற்காலத்தில் திரைத்துறை மற்றும் இசைத்துறையில் பிரபலமான ஒருவராக மாறினார்.