Reading Time: < 1 minute

திருடப்பட்ட கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், அதனை செலுத்திச் சென்ற 31 வயது ஆண் கைது செய்யப்பட்ட சம்பவம் நேற்று பிற்பகல் வேளையில் மிசிசாகாவில் இடம்பெற்றுள்ளது.

Tamil Business Directory

நேற்று பிற்பகல் 1:30 அளவில், Mclaughlin Road மற்றும் Avonwick Avenue பகுதியில் வாகனம் ஒன்று தலைகீழாக கவிழ்ந்துவிட்டதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்ததாக பீல் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஒரு வாகனம் மட்டும் தொடர்புபட்ட இந்த விபத்தில், கார் சம்பவ இடத்தில் தலைகீழாக கிடந்ததாகவும், அதன் சாரதி காரில் இருந்து வெளியேறி கால்நடையாக தப்பியோடிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அங்கிருந்து சிறிது தூரத்தில் அவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு காயங்கள் ஏற்பட்டிருந்த நிலையில் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட நபருக்கு நிலையான முகவரி ஏதும் இல்லை எனவும், அவர் மீது திருடப்பட்ட சொத்தினை வைத்திருந்தமை, சம்பவத்தினை அடுத்து அங்கு தரித்திருக்காது தப்பியோடிச் சென்றமை, அதிகாரிகளின் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மறுத்தமை, வாகத்தை விதிமுறைகளுக்கு முரணாகச் செலுத்திச் சென்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

குறித்த இந்த விபத்து இடம்பெறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னரே அந்த வாகனம் திருடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.