Reading Time: < 1 minute
Tamil Business Directory
கல்கரியில் 2019ஆம் ஆண்டின் முதல் பாதியில், அதிகமான இறப்புக்கள் ஃபெண்டானைல் போதை மருந்தினாலே சம்பவித்துள்ளதாக, ஆல்பர்ட்டாவின் ஓபியாய்ட் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
கல்கரியில் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 116 ஃபெண்டானில் தொடர்பான இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக குறித்த அறிக்கை தெரிவிக்கின்றது.
எட்மண்டனில் 80 பேர் இறந்துள்ளதாகவும், கிராண்டே ப்ரேரியில் 19 பேர் உயரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், லெத் பிரிஜ்சில் ஃபெண்டானில் தொடர்பான 11 தற்செயலான மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 81 சதவீதம், நேரடியான ஃபெண்டானிலுடன் தொடர்புடைய இறப்புகள் என குறித்த அறிக்கை கூறுகிறது




