Reading Time: < 1 minute

கனடாவின் ரொறன்ரோ பகுதியில் இன வெறி அடிப்படையில் செயற்பட்ட ஒருவரை பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

டிடிசி பஸ்ஸில் கடந்த மாதம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 33 வயதான நபர் ஒருவரை பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.

கருப்பின நிறவெறி அடிப்படையில் குறித்த நபர் நடந்து கொண்டதாகவும் கடுமையான வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

டிடிசி பஸ்ஸில் பயணம் செய்த போது குறித்த நபர் இவ்வாறு இனக்ரோத அடிப்படையில் செய்யப்பட்டதாகவும், மர்ம பொருள் ஒன்றை பீச்சி அடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சக பயணி ஒருவரிடம் இவ்வாறு மோசமாக இந்த நபர் நடந்து கொண்டார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து குறித்த இனக் குரோத அடிப்படையில் செய்யப்பட்ட நபர் தப்பிச் சென்றுள்ளார்.

எனினும், பொலிஸார் நடத்திய விசாரணைகளை தொடர்ந்து குறித்த நபரை கைது செய்துள்ளனர். வெறுப்புணர்வு சம்பவமாக இந்த சம்பவம் பதியப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.