Reading Time: < 1 minute

ஒன்றாரியோ மாகாணத்தின் கிங்ஸ்டன் பகுதியில் பட்டப் பகலில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

Tamil Business Directory

காயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்துள்ளதாக கிங்ஸ்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நபர் ஒருவர் ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தி வருவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இதன்போது மூன்று பேர் தாக்கப்பட்டு இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.