Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் நாடு தழுவிய அடிப்படையிலான பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பெண் ஒருவர் தேடப்பட்டு வருகின்றார்.
துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய பெண் ஒருவரே இவ்வாறு தேடப்பட்டு வருகின்றார்.
ஸ்டேஸி டென்வேய், என்ற 36 வயதான பெண் ஒருவரை பொலிஸார் தேடி வருவதாகவும் குறித்த பெண் தொடர்பான புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாத ஆரம்பத்தில் ரொறன்ரோவில் இடம் பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
37 வயது ட்ரிஸ்டோன் மெக்னெலி என்ற நபரே இந்த சம்பவத்தில் உயிரிழந்திருந்தார்.




