Reading Time: < 1 minute

கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தின் தென் கல்கரி பகுதியில் 24 வயதான இளம் தாய் ஒருவரும் அவரது மூன்று வயது மகளும் காணாமல் போய் உள்ளனர்.

Tamil Business Directory

24 வயதான டெஸிரி டி அவிலா மற்றும் மூன்று வயதான சாஸ்டி டி அவிலா ஆகிய இருவரும் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 22 ஆம் திகதி இவர்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது.

தென் கல்கரியின் நான்டோன் நகரில் இந்த இருவரும் காணாமல் போய் உள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் காஸ்ட்கார் பகுதிக்கு இந்த இருவரும் பயணித்த போது காணாமல் போயிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கியா ரியோ ரக வாகனம் ஒன்றில் இருவரும் பயணித்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண் 5 அடி 4 அங்குல உயரத்தை கொண்டவர் எனவும் 53 கிலோகிராம் எடையு உடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.