Reading Time: < 1 minute

‘அம்பூஸ்’ எனப்படும் திட்டமிட்டு பதுங்கியிருந்து மேற்கொள்ளும் அதிரடித் தாக்குதல் பாணியில் மிசிசாகாவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கித் தாக்குதலில் வழிப்போக்கர் ஒருவர் கொல்லப்பட்டுள்ள நிலையில், குறித்த இந்தச் சம்பவம் தொடர்பில் ஏழுபேரைத் தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

சனிக்கிழமை இரவு 6:30 அளவில், Morning Star Drive மற்றும் Goreway Drive பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக்கு பின்புறமாக இந்த தாக்குதல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த அந்த இடத்தில் நடனப் பாடல் காட்சி ஒன்றினை ஒரு குழுவினர் ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்த வேளையில், அங்கு தானியங்கித் துப்பாக்கிகளுடன் வந்த ஏழு பேர் குறித்த அந்த குழு மீது துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர்.

அதன்போது குறித்த அந்தப் படப்பிடிப்பினை பார்த்துக்கொண்டிருந்த வழிப்போக்கரான 17 வயது ஆண் ஒருவர் துப்பாக்கிக் குண்டு பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் ஐவர், (13 வயது சிறுமி ஒருவர், 16 வயது சிறுவன் ஒருவர், 17 வயது சிறுவர்கள் இருவர், சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர்) படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்திலிருந்து நூறுக்கும் அதிகமான வெற்றுத் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.