Reading Time: < 1 minute

நேற்று காலை Caledon பகுதியில் கார் ஒன்று மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 24 வயது ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது இரட்டைச் சகோதரர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

Landsbridge Street மற்றும் Queensgate Boulevard பகுதியில் நேற்று அதிகாலை 4:15 அளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

Sant Farm Driveவில் தெற்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வாகனம், Queensgate Boulevard Queensgate Boulevardஐ அண்மித்த போது, ஏதோவொரு காரணத்தினால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மரத்தின் மீது மோதுண்டுள்ளதனை ஆரம்பகட்ட விசாரணைகள் காட்டுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாகனத்தைச் செலுத்திச் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்ட நிலையில், அதில் பயணித்த சகோதரர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்துக்கும் மரணத்திற்கும் அளவுக்கு அதிகமான வேகம் மற்றும் ஆசனப் பட்டியை அணிந்திருக்காமை போன்றவை காரணங்களாக இருக்கக்கூடும் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த விபத்து சம்பவித்த வேளையில் அதனை நேரில் கண்டோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.