Reading Time: < 1 minute

கனடாவில் அபாயகரமான சந்தேக நபர்களில் பட்டியலில் தமிழ் இளைஞர் ஒருவரின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேடப்பட்டு வரும் 28 வயதான ஜெய்சன் ஜெயகாந்தன் என்பவரே அபாயகரமான நபராக அறிவிக்கப்பட்டுள்ளார். குறித்த நபரை காணும் பட்சத்தில் பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

சந்தேக நபரான தமிழ் இளைஞர் வன்முறையில் ஈடுபட கூடிய ஆபத்தானவர் என்று நம்பப்படுகிறது. அவரை காணும் பட்சத்தில் அவருக்கு அருகில் செல்ல வேண்டாம் எனவும், உடனடியாக 9-1-1 என்ற இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

அவர் மீது ஆயுதங்களை மறைத்து எடுத்து சென்றமை, துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியமை, பொது மக்களின் அமைதிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஆயுதங்களை வைத்திருந்தமை, துப்பாக்கிகளை விடுவித்தமை மற்றும் தடை செய்யப்பட்ட துப்பாக்கியை வைத்திருத்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் தேடப்பட்டு வருகின்றார்.

ஜெய்சன் ஜெயகாந்தனின் அங்க அடையாளங்களாக, 5.8 அடி உயரும் கறுப்பு நிற தலைமுடி மற்றும் பளுப்பு நிற கண்களை கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.