Reading Time: < 1 minute

பிரம்டன் பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்துத் தாக்குதலில் படுகாயமடைந்த ஆணின் உடல்நிலையில், முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

இதேவேளை, குறித்த கத்திக் குத்து தாக்குதலை நடத்திய சந்தேக நபரை பொலிஸார் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் குறித்த விபரங்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படாத நிலையில், இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறு பீல் பிராந்திய பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பிரதான வீதி வடக்கு மற்றும் தேவாலய வீதி கிழக்கு பகுதியில், நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 4:47 அளவில் இந்த கத்திக் குத்து சம்பவம் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.