Reading Time: < 1 minute

சுமார் ஒரு இலட்சம் டொலர்கள் பெறுமதியான பியர் மதுபாணத்தினை கொண்டிருந்த இணைப்புக் கொள்கல சரக்கு ஊர்தி ஒன்றினை திருடிய குற்றச்சாட்டில் இரண்டு ஆண்களைக் கைது செய்துள்ளதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

முழுமையாக பியர் மதுபாணம் நிரப்பப்பட்ட கொள்கலனுடனான குறித்த அந்தக் கனரக வாகனம் நேற்று திங்கட்கிழமை காலையில் Oxford County பகுதியில் இருந்து திருடப்பட்டுள்ளது.

இது குறித்து காவல்துறைக்கு முறைப்பாடு செய்த அந்தக் கனரக வாகனத்தின் உரிமையாளர், தனது வாகனம் ஒன்ராறியோ Brusselsற்கு வடக்கே, Huron East பகுதியில் இருப்பதனை வாகனத்தின் அமைவிட அவதானிப்புப் பொறி காட்டுவதாக தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் குறித்த அந்த வாகனத்தினைக் கண்டுபிடித்த அதிகாரிகள், சம்பவ இடத்தில் வைத்தே இருவரைக் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.