Reading Time: < 1 minute

திண்மக்கழிவுகளை மீள்சுழற்சிக்கு உட்படுத்தும் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Tamil Business Directory

கல்கரி பகுதியில் அமைந்துள்ள மீள்சுழற்சி நிலையத்திலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் அதிகளவான பிளாஸ்டிக் போத்தல்கள் காணப்படுவதாகவும், இதன் காரணமாக தீயிணை கட்டுப்படுத்துதில் சிக்கல் நிலை காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

எனினும், 14 தீயணைப்பு வீரர்கள் தீயிணை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் எவையும் வெளியிடப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.