Reading Time: < 1 minute

ஹொங்கொங் செல்லும் கனடியர்களுக்கான பயண எச்சரிக்கை, கனடிய மத்திய அரசினால் விடுக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

அங்கு வலுப்பெற்றுவரும் ஜனநாயக ஆதரவு போராட்டங்களை அடுத்து, இவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கணிசமான பாதுகாப்பு பிரச்சினைகளும், நிலைமைகள் குறுகிய பொழுதில் அபாயகரமானதாக மாறக்கூடிய சூழலும் ஹொங்கொங்கில் நிலவுவதாக, கனடிய அரசு தெரிவித்துள்ளது.

அங்கு ஏற்கனவே உள்ள கனடியர்களும், கூடுதல் அவதானத்துடன் இருக்குமாறும், உள்ளூர் ஊடகங்களை கண்காணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.