Reading Time: < 1 minute
Tamil Business Directory
நேற்று சனிக்கிழமை காலை ஸ்காபரோ Agincourt பகுதியில் வாகனம் ஒன்று கட்டிடம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த 26 வயதான வாகனத்தின் சாரதி, உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Middlefield வீதி மற்றும் Scottsfield Drive பகுதியி்ல், நேற்று காலை 5:30 அளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
ஒரு வாகனம் மட்டும் தொடர்புபட்டுள்ள இந்த விபத்துக்கு, அளவுக்கு அதிகமான வேகம் காரணமாக இருக்கக்கூடும் என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற பகுதி ஊடான போக்குவரத்துகளைத் தடை செய்த காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.




