Reading Time: < 1 minute

பிரம்டனில் உள்ள வீடு ஒன்றுக்கு வெளியே வைத்து மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்துத் தாக்குதலில் 63 வயது ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

Castlemore Drive மற்றும் Goreway Drive பகுதியில், Lanebrook Driveவில் உள்ள வீடு ஒன்றுக்கு வெளியே இன்று அதிகாலை 2:20 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர்கள் சிலருடன் ஏற்பட்ட தகராற்றைத் தொடர்ந்து வீதியில் வைத்து இந்த கத்திக் குத்துத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் ஒன்றுக்கு மேற்பட்ட சந்தேக நபர்கள் தொடர்புபட்டுள்ளமை தெரிய வருகின்ற போதிலும், அவர்கள் குறித்த தெளிவான விபரங்கள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை எனவும், வி்சாரணைகள் இன்னமும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளதாகவும், அந்தப் பகுதியில் உள்ளோர் மற்றும் சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தோரிடமிருந்து சாட்சியங்களைச் சேகரித்து வருவதாகவும், மனிதக் கொலை தொடர்பிலான சிறப்பு விசாரணைப் பிரிவினர் இந்ததச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளைப் பொறுப்பேற்பார்கள் என்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த இந்தச் சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தோருடன் உரையாட விரும்புவதாகவும், தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் காவல்துறையினர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து்ளளனர்.