Reading Time: < 1 minute

கனடாவில் பணவீக்க வீதம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Tamil Business Directory

வருடாந்த அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் நாட்டில் பணவீக்கம் 3.8 ஆக காணப்பட்டதுடன், கடந்த ஒக்ரோபர் மாதம் 3.1 வீதமாக குறைவடைந்துள்ளது.

கனடிய புள்ளிவிபரவியல் திணக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

எரிபொருளுக்கான விலை மாற்றத்தினால், பணவீக்கத்தில் சாதக மாற்றம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கனடாவில் தொடர்ந்தும் மளிகைப் பொருட்களின் விலைகள் அதிகரித்துச் செல்வாகவும் குறிப்பாக உணவுப் பொருள் விலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.