Reading Time: < 1 minute

கனடாவில் ஒன்றாறியோ மாகாணத்தின் ஒஷாவா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றுள்ளார்.

Tamil Business Directory

லொத்தர் சீட்டிலுப்பில் ஐந்து லட்சம் டொலர் பணப்பரிசு வென்றுள்ளார்.லொட்டோ மேக்ஸ் என்னும் லொத்தர் சீட்டிலுப்பில் அவர் இவ்வாறு பண பரிசினை வென்றெடுத்துள்ளார்.

46 வயதான பிரைன் வோகன் என்பவரே இவ்வாறு பண பரிசு வென்றெடுத்துள்ளார். எனினும் பரிசுத்தொகை வென்றெடுக்கப்பட்டது அறிந்தது முதல் ஒரு வார காலமாக தாம் நித்திரையின்றி தவிப்பதாக தெரிவிக்கின்றார்.

மகிழ்ச்சி காரணமாக தன்னால் உறங்க முடியவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

கடந்த 20 ஆண்டுகளாக தம் லொத்தர் சீட்டு விளையாட்டில் அவ்வப்போது ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிடுகிறார்.

கலந்து ஜூலை மாதம் இடம்பெற்ற சீட்டிலுப்பில் குறித்த நபர் பரிசுத்தொகையை வென்றுள்ளார்.

ஆரம்பத்தில் 500 டாலர் பரிசு வென்றதாகவே கருதியதாகவும் பின்னர் சரியாக பார்த்தபோது மேலும் அதிக அளவு பூச்சியங்கள் வெற்றி பரிசுத் தொகையில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இன்னமும் தாம் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை எனவும் மிகவும் கடினமான ஒரு காலத்தை கடந்ததாகவும் அவர் தெரிவிக்கின்றார்.