Reading Time: < 1 minute

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

மேற்கு கல்கரி பகுதியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறிய ரக விமானம் ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது என அல்பர்ட்டா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விமானியும், ஐந்து பயணிகளும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

Piper PA-32 ரக விமானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.

விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.