Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இந்த ஆண்டின் இதுவரையில் வாகன விபத்துக்கள் காரணமாக 150 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

ஒன்றாரியோ மாகாண பொலிஸார் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இந்த ஜூன் மாதத்தில் கடந்த 11ம் திகதி வரையில் 18 பேர் வாகன விபத்துக்களினால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2022ம் ஆண்டில் வாகன விபத்துக்களினால் 359 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த 16 ஆண்டு காலப் பகுதியில் மாகாணத்தில் பதிவான அதி கூடிய வாகன விபத்து மரண எண்ணிக்கை இதுவாகும்.

மது, போதைப் பொருள் பயன்பாடு, அதிவேகம், கவனயீனம், சீட் பெல்ட் அணியாமை போன்ற காரணங்களில் அதிகளவு மரணங்கள் சம்பவிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.