Reading Time: < 1 minute
Tamil Business Directory
றொரன்ரோ நகர மேயர் வேட்பாளர்களில் ஒருவரான கிறிஸ் ஷ்கோஸியாவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டின் பேரில் ஷ்கோஸியாவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஸ்கோஸியா, கோவிட் தடுப்பூசி ஏற்றுகைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாகாண முதல்வர் டக் போர்ட் உள்ளிட்ட அரசியல்வாதிகளை கொலை செய்வதாக மிரட்டல் விடுத்தமைக்காக கடந்த 2021ம் ஆண்டு ஷ்கோஸியா கைது செய்யப்பட்டார்.
கடந்த June 5ம் திகதி விடுத்த கொலை மிரட்டல் காரணமாக ஷ்கோஸியாவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
றொரன்றோவில் மேயர் பதவிக்கான இடைத்தேர்தலில் 102 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




