Reading Time: < 1 minute

கனடாவில் ஓடும் ரயில் ஒன்றில் சாகசம் காட்டிய இளைஞர் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Tamil Business Directory

இட்டோபீகொக் பகுதியில் ரயில் ஒன்றின் கூரையில் ஆபத்தான முறையில் இளைஞர் ஒருவர் பயணித்தார் என தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்த தகவலை அடுத்து றொரன்ரோ பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து ரயிலை நிறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான பயணங்கள் மிகவும் ஆபத்தானவை எனவும், ரயில் சாகசங்களை காண்பித்து பயணித்தவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.