Reading Time: < 1 minute
Tamil Business Directory
உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் செலன்ஸ்கீ மற்றும் கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஜப்பானில் நடைபெறும் ஜீ7 தலைவர்கள் மாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி, பிரதமர் ட்ரூடோவை சந்தித்துள்ளார்.
ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக செயற்பட உள்ளதாக கனடிய பிரதமர் உறுதியளித்துள்ளார்.
தொலைபேசி வழியாக அடிக்கடி பேசிக் கொள்வதாகவும் நேரில் சந்தித்து உரையாடக் கிடைத்தமை மகிழ்ச்சி அளிப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உக்ரைனுக்கு கனடிய மக்களும் அரசாங்கமும், பிரதமரும் வழங்கிவ ரும் ஒத்துழைப்பிற்காக நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் யுத்த கள நிலவரங்கள் தொடர்பில் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.




