Reading Time: < 1 minute

நேற்று இரவு வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் ஆலய இந்திரவிழாவில் வானில் பறக்கவிடப்பட்ட புகைக் கூண்டு ஒன்று பறந்து பருத்தித்துறை தும்பளை பகுதியில் வீடு ஒன்றின் மீது விழுந்துள்ளது

Tamil Business Directory

யாழ் வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் கொடியிறக்க திருவிழாவின் இந்திரவிழா உற்சவம் நேற்று இரவு 07 மணியளவில் மிகசிறப்பாக இடம்பெற்றது.

இதில் முத்துமாரியம்மன், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களை முத்துப்பல்லாக்கில் பக்தர்கள் சுமந்தவண்ணம் வீதி உலா வந்தனர்.

இதன்போது வானில் பறக்கவிடப்பட்ட புகைக் கூண்டு ஒன்று பருத்தித்துறை தும்பளை பகுதியில் வீடு ஒன்றின் மீது விழுந்ததால் வீட்டின் மேற்தட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தை அறிந்து திருவிழாவை நடத்திய வல்வை நெடியகாடு வரவேற்புக் குழுவினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று வீட்டு உரிமையாளருடனருக்கு நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தபோது அவர்கள் தங்களைத்தேடி அம்பாளே வீட்டிற்கு வந்ததாக சந்தோசம் அடைவதாக சொன்னார்கள்.

இருந்தபோதும் அவர்களுடைய உடமைகளுக்கு ஏற்பட்ட சேதத்தை சரிசெய்து தருவதாக உத்தாவாதம் செய்தமை குறிப்பிடத்தக்கது.