Reading Time: < 1 minute

றொரன்டோவில் தீ விபத்தில் சிக்கிய சிலர் மீட்கப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

கென்சிங்டன் – சைனாடவுன் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வீடொன்றின் கூரை மற்றும் பல்கனியில் சிக்கியிருந்தவர்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

அருகாமையில் இருந்த வீடுகளுக்கும் தீ பரவியதாக தீயணைப்புப் படையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த தீ விபத்தில் சிக்கிய ஆறு பேர் சிறு காயங்களுக்கு உட்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

தீ விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.