Reading Time: < 1 minute

றொரன்டோவில் விரைவில் போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

இன்னும் சில வாரங்களில் இளையோர் மற்றும் வயது வந்தர்வர்களுக்கான போக்குரவத்து கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளது.

சிரேஸ்ட பிரஜைகள், கட்டணச் சலுகை அறிவிக்கப்பட்ட பயணிகளுக்கான கட்டணங்கள் என்பனவற்றில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

றொரன்டோ போக்குவரத்து ஆணைக்குழுவின் வரவு செலவுத் திட்டத்திற்கு அமைய இவ்வாறு கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளன.

போக்குவரத்து சேவையில் பயணிக்கும் வயதுவந்தவர்கள் மற்றும் இளையோருக்கான கட்டணங்கள் 10 சதத்தினால் உயர்த்தப்பட உள்ளது.

இதேவேளை கட்டண அதிகரிப்பு குறித்த யோசனைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கட்டண அதிகரிப்பு யோசனைத் திட்டம் நியாயமானதாக அமையப்பெறவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.