Reading Time: < 1 minute

ஒன்ராறியோவின் Orillia பகுதியில், உள்ளூர் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்து காணப்பட்டதனை அடுத்து, குறித்த இந்தச் சம்பவம் தொடர்பில் ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tamil Business Directory

அங்குள்ள நகரக் குடியிருப்பு வீடு ஒன்றுக்கு வெளியே பெண் ஒருவர் காயமுற்ற நிலையில் காணப்படுவதாக வெள்ளிக்கிழமை காலை வேளையில் கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து அங்கு விரைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் உயிராபத்தான நிலையில் காணப்பட்ட பெண், உடனடியாகவே உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட போதிலும், சிகிச்சைகள் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் Orilliaவைச் சேர்ந்த 45 வயதான ட்ரேசி ரெய்ட் என அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது.

அவரின் மரணத்திற்கான உண்மையான காரணத்தினைக் கண்டறியும் வகையில், சடலம் மீதான உடற்கூற்றுப் பரிசோதனை ரொரன்ரொவில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ள காவல்துறையினர், மேலதிக தகவல்கள் எதனையும் வெளியிடாத நிலையில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.