Reading Time: < 1 minute

ஆயுத முனையில் வாகன கொள்ளையில் ஈடுபட்ட சிறுவன் உள்ளிட்ட இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

19 வயது மற்றும் 17 வயதான இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரண்டு இளைஞர்கள் சுமார் 12 வாகனங்களை ஆயுத முனையில் கடத்த முயற்சித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மே மாதம் 15ம் திகதி முதல் 26ம் திகதி வரையில் இவ்வாறு வாகன கடத்தல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஸ்காப்ரோவில் பத்து வாகனங்களும், டர்ஹம் பகுதியில் இரண்டு வாகனங்களும் கடத்துவதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் ஐந்து வாகனங்கள் கொள்ளையிடப்பட்டதாகவும் வாகனங்களை பொலிஸார் மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆயுத முனையில் வாகனக் கடத்தலில் ஈடுபட்ட இந்த இருவருக்கும் எதிராக மொத்தமாக நூறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.