Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் சுமார் 8 மில்லியன் டாலர்கள் பெருமதியான சட்டவிரோத போதை பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

Tamil Business Directory

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 23 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த விசாரணைகளுக்கு மொஃபாட் என பெயரடப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

டொரன்ரோ, வோகன், பெர்ரீ, பிரம்டன், மிசசாகா, ஹோக்வேல், நோர்த் பிக்கரிங் போன்ற பகுதிகளில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

29 துப்பாக்கிகள் 12 கிலோ கிராம் எடையுஉடைய பெண்டனர் 25 கிலோ கிராம் எடையுடைய கொக்கேய்ன், ஐந்து கிலோகிராம் இடையுடைய கிரிஸ்டல் மெத்தமடைன், 260,000 மொத்தமடைன் குளிசைகள் உள்ளிட்டன மீட்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மற்றும் கனடிய அமெரிக்க நாணயத்தாள்களும், பத்து வாகனங்களும் சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.