Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடிய முன்னணி விமான சேவை நிறுவன பணியாளர்கள், பணி புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர்.
கனடாவின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான வெஸ்ட் ஜெட் விமான சேவை நிறுவனத்தில் இவ்வாறு பணி புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
விமான சேவை நிறுவனத்தின் பராமரிப்பு பணியாளர்கள் இவ்வாறு நாளைய தினம் தொழிற்சங்க போராட்டத்தில் குதிக்க உள்ளனர்.
இதன் காரண காரணமாக வெஸ்ட்ஜெட் விமான சேவை நிறுவனம் சுமார் 40 விமான பயணங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
இந்த விமான பயணங்கள் ரத்து செய்த காரணத்தினால் சுமார் 6500 பயணிகள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழிற்ச சங்கம் எடுத்த கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக போராட்டத்தில் குதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




