Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் ரொறன்ரோ கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதி ஒன்றில் (Airbnb guests) தங்கி இருந்த விருந்தினர்கள் சுமார் இரண்டரை லட்சம் டாலர் பெறுமதியான ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
தர்ஹம் பொலிஸார் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் இந்த கொள்ளை சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த இடத்தின் உரிமையாளர் சந்தேக நபர்கள் தங்கியிருந்த வீட்டை விட்டு வெளியேறியதன் பின்னர் சோதனையிட்டபோது ஆபரணங்கள் காணாமல் போய் இருப்பதனை கண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சந்தேக நபர்களிடமிருந்து தங்க ஆபரணங்களும் மீட்கப்பட்டுள்ளன. இந்த சந்தேக நபர்களிடமிருந்து கொக்கேய்ன் போதை பொருளும் மீட்கப்பட்டுள்ளது.




