Reading Time: < 1 minute

கனடா மக்கள் தமது 20 களிலேயே ஓய்வுக்காலத் திட்டமிடலை ஏன் ஆரம்பிக்கிறார்கள் என்பது குறித்த காரணங்களை CIBC வங்கி வெளியிட்டுள்ளது.

Tamil Business Directory

CIBCவங்கி வெளியிட்ட புதிய ஆய்வின்படி, சராசரியாக கனடா மக்கள் தமது 30 வயதில் ஓய்வுக்காலத் திட்டமிடலைத் தொடங்குகின்றனர்.

எனினும் இன்றைய இளைஞர்கள், சராசரியாக 24 வயதிலேயே சேமிக்கத் தொடங்குகின்றனர் என கூறப்படுகின்றது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு பணவீக்கம்

இந்த நிலையில், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக எதிர்காலப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளமை காரணமாகவே, கனேடிய மக்கள் முன்கூட்டியே திட்டமிடுவதற்கான காரணம் என்று செய்தி இணையம் ஒன்று கூறுகிறது.

கல்விக்காக வாங்கிய கடன்களை அடைக்க வேண்டிய கட்டாயம் காரணமாக, மாணவர்களுக்கு முன்கூட்டியே நிதித் திட்டமிடலைச் செய்யத் தூண்டுகிறது. வங்கியின் ஆய்வின்படி, 74வீத கனடியர்கள் பணவீக்கம் தங்களது ஓய்வுக்காலத் திட்டத்தைப் பாதிக்கும் என அஞ்சுகின்றனர்.

இதேவேளை, திட்டமிடுவதற்கு எதுவுமே மிக விரைவான காலம் அல்ல” என்று கூறும் நிதி நிபுணர்கள், வரவு செலவு தொடர்பில் திட்டமிடுதல், சேமிப்பு மற்றும் முதலீடு போன்ற நல்ல பழக்கங்களை இளமையிலேயே தொடங்குவது மன அமைதியைத் தரும் எனக் குறிப்பிடுகின்றனர்.