Reading Time: < 1 minute

கனடாவில் 12 வயது சிறுமியொருவர் பல்கலைக்கழக பட்டமொன்றை பெற்று சாதனை நிலைநாட்ட உள்ளார்.

Tamil Business Directory

கனடாவின் ஒட்டாவா பல்கலைக்கழத்தில் உயிரியல் மருத்துவ விஞ்ஞானப் துறையில் இளநிலை பட்டம் பெற்றுக்கொள்ள உள்ளார்.

கனடிய வரலாற்றில் மிக இள வயதில் பல்கலைக்கழக பட்டம் பெற்றுக்கொண்டவர் என்ற சாதனையை அன்தியா கிரேஸ் பெட்ரிசியா டென்னிஸ் என்ற சிறுமி பெற்றுக்கொள்ள உள்ளார்.

பெட்ரிசியா டென்னிஸ் தனது ஒன்பது வயதில் பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

பட்டம் பெற்றுக்கொள்வது பெருமிதமாகவும் மகிழ்ச்சியாகவும் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இரண்டரை வயது முதலே பெட்ரிசியா டென்னிஸ் அபார திறமைகளை வெளிப்படுத்த தொடங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

பட்டப் படிப்பினை பூர்த்தி செய்த பெட்ரிசியா டென்னிஸ் நாளைய தினம் பட்டமளிப்பு விழாவில் அதிகாரபூர்வமாக பட்டத்தை பெற்றுக்கொள்ள உள்ளார்.