Reading Time: < 1 minute
Tamil Business Directory
100 மில்லியன் மருத்துவ தர என்95 முகக்கவசங்களை, உற்பத்தி செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஒன்றாரியோ மாகாண முதலவர் டக் ஃபோரட் ஆகியோர் 3எம் நிர்வாகிகளுடன் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் ஊடாக, ப்ரோக்வில்லிலுள்ள ‘3எம் கனடா’ ஆண்டுக்கு 100 மில்லியன் மருத்துவ தர என்95 முகக்கவசங்களை உற்பத்தி செய்யும்.
இதுகுறித்து பிரதமர் ட்ரூடோ கூறுகையில், ‘இது கொவிட்-19 க்கான தீர்வுகளைக் கண்டுபிடிப்பதற்காக கனடாவில் உற்பத்தி செய்யும் நம்முடைய திட்டத்தின் ஒரு பகுதியாகும்’ என கூறினார்.




