Reading Time: < 1 minute

ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல், அதற்கு ஈரான் கொடுத்துவரும் பதிலடியால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், 10 நாடுகள் தொடர்பில் கனேடியர்களுக்கு பயண ஆலோசனை ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், 10 நாடுகளுக்கு பயணிப்பதை தவிர்க்குமாறு கனடாவின் உலக விவகாரங்கள் அமைப்பு (Global Affairs Canada – GAC) கனேடியர்களை அறிவுறுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு பகுதியில், 85,000க்கும் அதிகமான கனேடியர்களும், கனேடிய நிரந்தரக் குடியிருப்பு பெற்றவர்களும் உள்ளார்கள்.

இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு பயணிக்கவேவேண்டாம் என கனடாவின் உலக விவகாரங்கள் ஏஜன்சி மக்களை அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், மத்திய கிழக்கு நாடுகளான பஹ்ரைன், ஈராக், குவைத், லெபனான், கத்தார், சிரியா, அக்கிய அரபு அமீரகம் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளுக்கு பயணிக்கவே வேண்டாம் என்றும், அத்தியாவசியம் இருந்தாலொழிய, ஜோர்டான், ஓமான் மற்றும் சவுதி அரேபியாவுக்கு பயணிக்கவேண்டாம் என்றும் கனடா தன் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், மத்திய கிழக்கிலிருக்கும் கனேடியர்கள், பயணம் தொடர்பிலான விவரங்கள், ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வசதியாக, கனடாவின் உலக விவகாரங்கள் ஏஜன்சியில் தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.