Reading Time: < 1 minute

கனடாவில், ஹாமில்டனைச் சேர்ந்த 15 வயது பதின்மவ வயதுடைய சிறுவன் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

வாகன பந்தயத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மற்றுமொரு வாகனத்துடன் மோதி சிறுவன் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அப்பர் கேஜ் அவென்யூ பகுதி மேம்பாலத்தில் உள்ள லிங்கன் அலெக்சாண்டர் பார்க்வேயில் வாகனங்கள் சில வேகமாக பந்தயத்திற்காக செலுத்தப்படுவதனை அவதானித்தாக சிலர் தெரிவித்துள்ளனர்.

பந்தயத்தின் மத்தியில், மூன்று வாகனங்களில் இரண்டு சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து மோதியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கட்டுப்பாட்டை இழந்த ஒரு வாகனம் கட்டுப்பாட்டை மீளப் பெற்றுக்கொண்ட போதிலும், 15 வயது சிறுவன் செலுத்திய வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதுண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வாகனத்தில் பயணம் செய்த மூன்று பேர் கயாமடைந்து வைத்தயிசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், வாகனத்தைச் செலுத்திய 15 வயதுடைய சிறுவன் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.